வடகிழக்குப் பருவமழை தொடங்க இன்னும் 6 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், கால்வாய் தூர் வாறும் பணிகள் விரைவாக நடைபெறவில்லை, மீண்டும் ஒரு வெள்ளத்துக்கு சென்னை தாங்காது என்று கூறியுள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், வெள்ளநீர் வடிகால்களை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.