நடிகை கீதாஞ்சலி 'ராஜா ராணி' தொடருக்குக் கமிட் ஆன 3 மாதத்திலேயே சீரியலைவிட்டு வெளியேறினார். கேரக்டருக்கு அவங்க முகம் பொருந்திப் போகலை' என்றே யூனிட்டில் பரவலாகப் பேசப்பட்டது. `பேசறவங்க ஆயிரம் காரணம் சொல்லலாம். அதுபத்தி எனக்கு கவலையில்லை. ஷூட்டிங் தேதிகள்ல பிரச்னையானதாலதான் நான் வெளியேற வேண்டியதாகி விட்டது’ என கீதாஞ்சலி கூறினார்.