சென்னை டு சேலம் இடையேயான 8 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகளும் 2 வாரக்காலத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 8 வழிச் சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் திட்டமும் இருப்பதால் அதை இறுதி செய்யும் வரை பணிகள் நிறுத்தி வைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.