மலப்புரத்தைச் சேர்ந்த ஜெய்ஷால் (32), கேரள வெள்ளத்தின்போது  தன் முதுகைப் படிக்கட்டாக்கிக்கொள்ள, பெண்கள் அவரின்மீது கால்வைத்து படகில் ஏறினர். இவரின், மீட்பு பணியைப் பாராட்டி, இவருக்கு ஒன்று கார் பரிசாக வழங்கப்பட்டது. கேரளாவில் உள்ள சன்னி யுவஜன சங்கம்  என்ற இஸ்லாமிய அமைப்பினர் ஜெய்ஷாலுக்கு வீடு ஒன்றையும் தற்போது பரிசாக வழங்கியுள்ளனர்.