முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், `3 நாள்களுக்குத் தேவையான, நிலக்கரி மட்டுமே தற்போது கையிருப்பில் உள்ளது. தற்போதைய நிலை நீடித்தால் சில அனல்மின் நிலையங்களை மூடும் நிலைமைக்குத் தள்ளப்படுவோம். எனவே, நாள் ஒன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.