ஒடிசா அருகே டிட்லி புயல் இன்று கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அங்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசா பூரி கடற்கரையில் புயல் போன்ற உருவம் செய்து அதில் ‘டிட்லி புயல், பயப்பட வேண்டாம்! பத்திரமாக இருங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.