வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த டிட்லி புயல் இன்று காலை ஒடிசாவுக்கும் ஆந்திராவுக்கும் இடையே கரையைக் கடந்தது. இருந்தும் அங்கு கன மழை பெய்து வருவதால் மாநிலம் முழுவதும் ரயில்கள், விமானப் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் தரை வழிப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.