மத்தியப்பிரதேசத்தின் பன்னா நகரத்தில் உள்ள கூலித் தொழிலாளி மோதிலால் பிரஜாபதி என்பவருக்கு, 42.9 காரட் வைரம் கிடைத்துள்ளது. இதன் மதிப்பு ஒன்றரைக் கோடி ரூபாயாகும். ‘நான் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளேன். நாங்கள் மூன்று தலைமுறையாக வைரத்தைத் தேடுகிறோம். என்னை கடவுள் ஆசீர்வதித்திருக்கிறார்’ என மோதிலால் கூறியுள்ளார்.