குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயரும்போது, அந்த ராசிக்குரிய நதியில் புஷ்கரம் விழா கொண்டாடப்படுகிறது. குரு இன்று முதல் விருச்சிக ராசிக்குப் பிரவேசிக்கிறார். இதனால் தாமிரபரணி நதியில் மகாபுஷ்கரம் விழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. இந்த விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்து நதியில் நீராடினார்.