இன்றைய தினம் இந்திய பங்குச் சந்தையில் விற்பனை தொடங்கிய ஐந்தே நிமிடங்களில், பெரிய சரிவைச் சந்தித்து முதலீட்டாளர்களுக்கு ரூ.4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. தேசிய பங்குச் சந்தையில் 307 புள்ளிகள் சரிந்து, 10154 புள்ளிகளாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் 1,029 புள்ளிகள் சரிந்து, 33,732 புள்ளிகளாக இருந்தது.