கரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக்குகளை தின்று பலரது கண்களுக்கு முன்பே பசுமாடு ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த போட்டோக்களை வைத்து ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட, `பிளாஸ்டிக் எமனை உடனே அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கணும்’ என்று சமூக ஆர்வலர்கள் பொங்கி வருகிறார்கள்.