மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் தங்களை விடுவிக்க வேண்டுமென்று நிர்மலாதேவியுடன் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள உதவிப்பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் புதிய மனுவை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்காத நீதிபதி, மீண்டும் வரும் 12-ம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.