ஐ.பி.எல் தொடரிலிருந்து இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு தர வேண்டும் எனக் கோலி கோரிக்கை விடுத்துள்ளார். உலகக்கோப்பை தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் கோலி, இந்தக் கோரிக்கையை வைத்துள்ளார். ஐ.பி.எல் தொடர் முடிந்த 10 நாள்களில் உலகக்கோப்பை தொடர் தொடங்குவதால் வீரர்களுக்கு ஓய்வு தேவை என அவர் தெரிவித்துள்ளார்.