ஒரு மனிதன் தினமும் சராசரியாக 8 மணி நேரம் தூங்க வேண்டும். இரவில் அதிக நேரம் விழித்திருப்பது, இரவுப்பணி என பல காரணங்களால் குறைவான நேரம் தூங்குபவர்கள் இப்போது அதிகரித்துவிட்டனர். ஒரு நாளைக்கு 8 மணி நேரத்துக்கும் குறைவாகத் தூங்குபவர்களுக்கு உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.