`13 பேரின் உயிரைப் பறித்த அவ்னி புலி சுட்டுக் கொல்லப்பட்டது அம்பானிக்காகதான்' என ராஜ் தக்கரே குற்றம்சாட்டியுள்ளார். `யாவத்மால் பகுதியில் நடைபெற்று வரும் அனில் அம்பானியின் தொழிற்சாலை திட்டத்துக்காகவே அவ்னி புலி சுட்டு கொல்லப்பட்டுள்ளது. கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக புலி கொல்லப்பட்டுள்ளது’ என்று அவர் குற்றம்சாட்டினார்.