அவ்னி புலி சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன் ஒரு வாரக் காலத்துக்கும் மேலாக உணவு சாப்பிடவில்லை என்று உடற்கூறு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த வனத்துறை அதிகாரிகள் அவ்னியின் இரு குட்டிகளையும் தேடி கண்டுபிடிக்கும் முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். குட்டிகள் பட்டினியால் இறந்து போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.