அல்லும் பகலும் சிவத் தொண்டு புரிவதையே தம் தலையாயக் கடமையெனக் கொண்ட  சிவனடியாரான பூசலார் நாயனாரின் குருபூஜை தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. பூசலார் நாயனார் சிவபெருமானோடு இரண்டறக் கலந்த நட்சத்திரம் ஐப்பசி அனுஷம். இந்த தினத்தில் அனைத்து சிவாலயங்களிலும் அவரது திருவுருவச் சிலைக்குச் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.