சென்னை கஸ்தூரி பாய் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் கருத்தரிப்பு ஆராய்ச்சி மையம், தாய் சேய் நல மையம், தாய்ப்பால் வங்கி என பல்வேறு திட்டங்களைத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கிவைத்தார். அதோடு தாய் சேய் விழிப்பு உணர்வு நலப் பூங்கா, ஆண் மற்றும் பெண் பார்வையாளர் தங்கும் அறை ஆகியவற்றையும் பார்வையிட்டார்.