சர்கார் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழு சம்மதம் தெரிவித்ததாக திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக படக்குழுவினரிடம் தான் பேசிவிட்டதாகவும், அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும். நாளை பிற்பகல் முதல் குறிப்பிட்ட காட்சிகள் நீக்கப்பட்டு படம் திரையிடப்படும் எனத் தெரிவித்தார்.