கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாய் வழங்கியிருந்தார் அல்லு அர்ஜுன். அவரை கெளரவிக்கும் வகையில் வரும் நவம்பர் 10-ம் தேதி ஆலப்புழாவில் நடக்க இருக்கும் படகுப் போட்டிக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள கேரளா அரசு தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் கலந்துகொள்ள உள்ளார்.