திருவாரூர் மாவட்டம் ஆதிரெங்கம் கிராமத்தைச் சேர்ந்த உழவரும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முதன்மைச் சீடருமான நெல் ஜெயராமன், உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலை காலமானார். மறைந்த விவசாயி `நெல்' ஜெயராமனின் உடலுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின், டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.