ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு இந்தியா 250 ரன்கள் குவித்துள்ளது. புஜாரா 123 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொதப்பினர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க், ஹேசல்வுட், லயன், கம்மின்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.