மேக்கே தாட்டூ அணை தொடர்பாக விவாதிக்க வேண்டும் எனக் கூறி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடக அமைச்சர் சிவகுமார் கடிதம் எழுதியுள்ளார். மேலும் மேக்கே தாட்டூ அணை குறித்து தமிழக மக்கள், தமிழக அரசு நினைப்பது வேறு. ஆனால், உண்மை நிலை வேறு என்றும் அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.