இன்றைய டெஸ்ட் போட்டியில் 231 பந்துகளில் சதம் அடித்தார் இந்திய வீரர் புஜாரா. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தன் 16-வது சதத்தை எட்டி சாதனை படைத்தார். அதேபோல் இந்தப் போட்டியின்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ரன்கள் என்ற மைல்கல்லையும் எட்டினார். 108 இன்னிங்ஸில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.