பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்கக்கோரி சமீபத்தில் வைகோ தலைமையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்த நிலையில், ஆளுநர் மாளிகை முன்பு தடையை மீறி போராட்டம் நடத்தியதாக வைகோ உள்ளிட்ட 687 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.