`பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பாப்புலரானவர் நடிகை சுஜா வருணி. பிக் பாஸ் முதல் சீஸனில் அப்பா ஸ்தானத்தில் இருந்து தன் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று சுஜா, கமலிடம் கேட்டதற்கு அவரும் ஓகே சொன்னார். ஆனால், சுஜா திருமணத்துக்கு கமல் வரவில்லை. அதனால், தன் வீட்டுக்கு அழைத்து கல்யாண ஜோடிக்கு விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறார் கமல்.