சென்னையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் சிவமணி, கடந்த 20 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துவருகிறார். மாற்றுத்திறனாளிகள் மீது ஏன் இன்ஸ்பெக்டர் சிவமணி பாசம் காட்டுகிறார் என்று விசாரித்தால் அவரின் மனித நேயமும் உதவிசெய்யும் குணமும்தான் காரணம் என்கின்றனர் அவருடன் பணியாற்றிய சக காவலர்கள்.