வடமாநில பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான குற்றவாளிக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் கும்பகோணம் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகி வழக்கை நடத்துவதில்லை என வழக்கறிஞர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் இந்தக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராகக் கூடாது என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.