கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிவ பார்வதி ஆலயத்தில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் என இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடித்தது. நேற்று ஆலயத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் அதற்கான சான்றிதழை வழங்கினர்.