நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு பா.ஜ.க விடுத்த அழைப்பை தி.மு.க தலைவர் ஸ்டாலின் மறுத்துள்ளார்.  ``பிரதமர் மோடி வாஜ்பாயும் அல்ல. அந்தக் கூட்டணி ஆரோக்கியமான கூட்டணியும் அல்ல. பா.ஜ.க வுடன் ஒருபோதும்  கூட்டணி கிடையாது” என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.