சென்னை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதை ஓட்டி வந்த கல்லூரி மாணவர், சாலையில் பைக்கை போட்டுவிட்டு தப்பினார். பைக்கின் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.