உத்தரப்பிரதேசத்தில் அடையாளம் தெரியாதவரின் உடலை டையர், பிளாஸ்டிக் பொருள்கள் போன்ற தேவையில்லாத குப்பைகளுடன் சேர்த்துவைத்து எரித்துள்ளனர் அம்மாநிலக் காவலர்கள். உடலை எரிக்க வழங்கப்பட்ட பணத்தை, தாங்களே எடுத்துக்கொண்டு இப்படிச் செய்துள்ளனர். இது அந்த மாநிலத்தில் பெரும் சர்ச்சையாகியுள்ளது.