ஜல்லிக்கட்டுப் போராட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென்று மதுரைக் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த முகிலனை காவல்துறை கைது செய்துள்ளனர். ‘ஜல்லிக்கட்டு உரிமைக்காக உறுதியுடன் போராடியவர்களுக்கு அரசு சிறப்பு செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்களை வழக்குப் போட்டு நீதிமன்றத்துக்கு அலைய வைப்பது அறமானது அல்ல’ எனத் தெரிவித்துள்ளார்.