எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கரூர் ரயில் நிலையத்துக்கு வந்தபோது ரயிலின் கழிவறைக்குள் இருந்து 40 வயது மதிக்கத்தக்க நபர் பிணமாக மீட்கப்பட்டார். தான் அணிந்திருந்த காவி வேட்டி மூலம் கழிவறை கம்பியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். இதைப் பார்த்து ரயில் பயணிகள் அலறினர்.