திருவள்ளூர் தி.மு.க எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரனின் இல்லத் திருமண விழாவில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கலந்துகொண்டனர். கமலுக்கும், ஸ்டாலினுக்கும் இடையே அரசியல் மோதல்கள் இருக்கும் சூழலில் இருவரும் ஒரே மேடையில் இருப்பது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.