ஐக்கிய அரபு அமீரக தலைநகரமான அபுதாபியில் மூன்றாவது நீதிமன்ற அலுவல் மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அங்கு அரபிக்கும், ஆங்கிலமும் மட்டுமே நீதிமன்ற அலுவல் மொழிகளாக இருந்து வந்தன. அமீரக நாடுகளில் வசித்துவரும் சுமார் 50 லட்சம் பேரில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள்.