`காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து தேர்தல் நடத்துவதுதான் முறையானதாக இருக்கும். தனித்தனியே தேர்தல் நடத்துவதால் ஏற்படும் பொருள் செலவை தடுத்து  இடைத்தேர்தல் என்றாலே பணப் பட்டுவாடா செய்வதுதான் என்ற கேவலமான நிலையை மாற்ற வேண்டும்’ என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.