நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா - விசாகன் திருமணம் இன்று நடைபெற்றது. திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், கமல் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். திருமணத்தில் கலந்துகொண்ட வைகோ மணமக்களான சௌந்தர்யா - விசாகன் இருவருக்கும் திருக்குறள் புத்தகத்தை வழங்கி ஆசீர்வாதம் செய்தார்.