கூடங்குளம் இரண்டாவது அணு உலை கடந்த 8-ம் தேதி மின் உற்பத்தியை நிறுத்தியது. அணு உலையின் வால்வில் பழுது ஏற்பட்டதால் செயல்பாட்டை நிறுத்தி வைத்து இருப்பதாகத் தகவல் வெளியானது. பின்னர் உலையில் ஏற்பட்ட பழுதைச் சரிசெய்யும் பணியில் ரஷ்ய விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி சரிசெய்து  இன்று அதிகாலை மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.