தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் போட்டியிடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இளவரசி குடும்பத்துக்கும் தினகரனுக்கும் மனக்கசப்பு நிலவி வந்த வேளையில், சசிகலாவின் உத்தரவின் பெயரில் விவேக்குக்கு சீட் ஒதுக்க முடிவெடுத்து தினகரன் இறங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது.