அ.தி.மு.க கூட்டணியில் கள்ளக்குறிச்சி தொகுதி தே.மு.தி.க-வுக்கு ஒதுக்கப்படவுள்ளது. இத்தொகுதியில் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா போட்டியிடப்போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது வெற்றிக்குத் தான் பொறுப்பேற்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவாதம் அளித்திருப்பதாகத் தே.மு.தி.க வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.