உலகளவில் நடைபெறும் டேலன்ட் ஷோ `வேர்ல்டு பெஸ்ட்.’ இதில், இந்தியாவின் சார்பாகத் தமிழகச் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் கலந்துகொண்டு `வேர்ல்டு பெஸ்ட்’ என்ற டைட்டிலை வென்றிருக்கிறார். முதல் சுற்றில், லிடியன் அதிவேகத்தில் வாசித்த பியானோ இசையை உலகளவில் பிரபலங்கள் தங்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.