பொள்ளாச்சி சம்பவத்தைப் போல ஆவடி நகராட்சியின் முன்னாள் பெண் கவுன்சிலர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். பெண் கவுன்சிலரும் டிரைவரும் பேசிய ஆடியோவை வைத்து ஒரு கும்பல் மிரட்டி பணம் பறித்துள்ளனர். போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முன்னாள் கவுன்சிலரின் கணவர் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.