ஏப்ரல் 18 -ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நேரத்தில் பள்ளிகளுக்கு தேர்வுகள் நடத்துவது சிரமமாக இருக்கும் என்பதால் 1 முதல் 9 -ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 12-ம் தேதிக்குள் முழு ஆண்டு தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.