ராகுல் காந்தியை `ஹாய் ராகுல்' என அழைத்த ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி பெண் அஸ்ரா காதர், ``நான்தான் முதல்ல கேள்வி கேட்கப் போறேன்னு எனக்குத் தெரியாது. என்னை கூல் பண்ற மாதிரி அவரே  சார்னுலாம் கூப்பிடாதனு சொல்லிட்டாரு. நானும் `ஹாய் ராகுல்'னு சொல்லிட்டேன். அவர் சொன்ன பதில் நம்பிக்கை அளிக்கக்கூடியதா இருந்தது" எனப் பூரிக்கிறார்.