பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில் தனது பெயரையும், தன் குடும்பத்தின் பெயரையும் களங்கப்படுத்தும் விதமாக ஸ்டாலின் மருமகன் சபரீசன் செயல்படுவதாக சென்னை மாநகரக் காவல்துறையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் சபரீசன் மீது தற்போது வழக்குப் பதியப்பட்டுள்ளது.