பிள்ளைகள்கூட பெற்றவர்களை மட்டும் தான் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு மரம் ஊரையே பார்த்துக் கொள்ளும். எனக்குக் குழந்தைகள் இல்லை. ஆனால் நான் நூற்றுக்கணக்கான மரங்களுக்குத் தாய். இதுபோதும் என் வாழ்க்கைக்கு. வாழ்வில் கடமை என்று இருந்தால் அது மரங்கள் நடுவதுதான்’ என மரம் திம்மக்கா பாட்டி தெரிவித்துள்ளார்.