உத்தரபிரதேசம், பாரபங்கி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு வழங்கபடும் டிக்கெட்டுக்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா திட்டம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழலில் அரசின் நல திட்டங்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.