திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக சசி தரூர் அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று தாம்பனூர் பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் சசி தரூர் தன் எடைக்கு நிகரான வாழைப்பழங்கள் வழங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக துலாபாரம் கவிழ்ந்து விழுந்துள்ளது. இதில் சசி தரூருக்கு தலையில் பலத்த அடிப்பட்டு ஆறு தையல் போடப்பட்டுள்ளது.