`பாபநாசம்' படத்தின் இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கயிருக்கும் புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் நடிகர் கார்த்தி. இந்தப் படத்தில் இவர் தன்னுடைய அண்ணியாகிய நடிகை ஜோதிகாவுடன் நடிக்கயிருக்கிறார். படத்தில் இவர்கள் இருவரும் அக்கா, தம்பியாக நடிக்க இருக்கிறார்களாம். ஜோ தற்போது 2 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.